ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும், தனியார் பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 10 ஆயிரம் இடங்களும் உள்ளன. இவ்வளவு இடங்கள் இருந்தும், 4,535 மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஆன் - லைன் முறையில், வரும் ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது. விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவ, மாணவியரும், அரசு பள்ளிகளிலேயே சேர வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, கலந்தாய்வு மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி சேர்க்கை என, 9,971 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டும், இதே அளவிற்கு, மாணவர் சேர்க்கை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை