Ad Code

Responsive Advertisement

மீன்வள அறிவியல் பட்டப் படிப்பு

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில், பி.எஃப்.எஸ்சி. என்று அழைக்கப்படும்  இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 படித்த மாணவர்கள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 4 ஆண்டுகளுக்கான முழு நேரப் பட்டப் படிப்பு இது. மொத்தமுள்ள இடங்கள் 40.


கல்வித் தகுதி: பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்பில், உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும் அல்லது தொழிற் பயிற்சிப் பாடப் பிரிவுகளை (வொகேஷனல்) எடுத்துப் படித்திருக்கவேண்டும்.

உயிரியல் அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல் படிப்புகளில் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் இதரப் பொதுப் பிரிவினர் 60 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 55 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். வேதியியல், இயற்பியல் ஆகிய இரண்டு பாடங்களிலும் சேர்த்து பிற்படுத்தப்பட்டோர், பொதுப்  பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களையும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 55 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பிப்பது எப்படி?: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடியினருக்கு ரூ.300. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் Finance Officer, TNFU, Nagapattinam (payable at Nagapattinam)’ என்கிற பெயருக்கு வரைவோலை எடுத்து, இணையதளத்தில் கூறப்பட்டுள்ளபடி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2014

 விவரங்களுக்கு: www.tnfu.org.in


கைத்தறி, துணி நூல் தொழில்நுட்ப பட்டயப் படிப்பு

சேலத்திலுள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்தில், கைத்தறி மற்றும் துணி நூல் தொழில்நுட்ப ஓராண்டு டிப்ளமோ  படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பத்தாம் வகுப்பு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், 01.07.2014-ஆம் தேதியன்று 15 முதல் 23 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் வயது 15 முதல் 25-க்குள் இருக்கவேண்டும்.

தமிழக அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாநிலத்திற்கான மொத்த இடஒதுக்கீட்டில் கைத்தறி நெசவாளர் சமூகத்தைச் சேர்ந்தோர், பாரம்பரியமாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சேர்ந்தோர் அல்லது நெசவுத் தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அவர்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.

சேலத்திலுள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்திற்கு 26 இடங்களுக்கும், ஆந்திர மாநிலம் வெங்கடகிரியில் உள்ள  எஸ்.பி.கே.எம். இந்திய கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்தில்  4 இடங்களுக்கும், கர்நாடக மாநிலம் கடாக்கிலுள்ள  கர்நாடகா கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்தில்  8 இடங்களுக்கும்,  கேரள மாநிலம்  கன்னூரிலுள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பப் பயிலகத்தில் 6 இடங்களுக்கும் தமிழக தகுதிப் பட்டியலிலிருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை ‘கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம், 2-ஆம் தளம், சென்னை - 600 018’ என்ற முகவரியில் அனைத்து வேலை நாட்களிலும் நேரடியாகவோ அல்லது ரூ.5 அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையை அனுப்பியோ 10.06.2014-க்குள் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2014

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement