Ad Code

Responsive Advertisement

வரலாறு ஆசரியர்கள் அதிர்ச்சி... வழக்கு நிலுவையில் உள்ளபோதே முன்னுரிமை பட்டியல் வெளியீடு

வரலாறு பாட ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறும்போது 1:3 என்ற விகிதாச்சாரம் பின்பற்றப்படுகிறது. மொத்தமுள்ள வரலாறு ஆசிரியர் பதவி உயர்வு பணியிடங்களில், இளங்கலை மற்றும் முதுகலை என இரு பட்டப்படிப்பிலும் வரலாறு (சேம் மேஜர்) படித்தவர்களுக்கு ஒரு பணியிடமும், இளங்கலையில் வரலாறு தவிர்த்த பிற பாடங்கள் படித்து, முதுகலையில் மட்டும் வரலாறு படித்தவர்களுக்கு (கிராஸ் மேஜர்) 3 பணியிடமும் ஒதுக்கப்படுகிறது.


இதனால் இளங்கலை மற்றும் முதுகலையில் வரலாறை மட்டுமே முதன்மை பாடமாக படித்த ஏராளமான ஆசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த 1:3 என்ற விகிதாச்சார முறையை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே, தற்போது நடைமுறையில் உள்ள 1:3 என்ற விகிதத்தில் பதவி உயர்வு பெறுவோரின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வரலாறு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு வரலாறு ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறுகையில், முர ண்பாடான பதவி உயர்வு உள்ள அரசாணை எண் 266ல் மாற்றம் செய்யவேண்டும் என 2012 ஜனவரியில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தோம். 2012 மற்றும் 2013ல் இரு முறை கல்வித்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்குட்பட்டது என்றும் உத்தரவிட்டது. ஆனாலும் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இந்த ஆண்டிலும் 1:3 என்ற முந்தைய விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement