அரசு பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை, 'டிரான்ஸ்பர்' செய்ய, கல்வித்துறை எடுத்துவரும் நடவடிக்கைக்கு எதிராக, ஆசிரியர்களும்
ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், போர்க்கொடிதூக்கி உள்ளனர்.நிர்ணயிக்கப்பட்டஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரப்படி, அரசு பள்ளிகளில், தற்போதுள்ள நிலைமையை ஆய்வு செய்து, உபரியாக உள்ள, 3,000பட்டதாரி ஆசிரியர்களை, ஆசிரியர் தேவை உள்ள பள்ளிகளுக்கு, பணியிட மாற்றம் செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நடவடிக்கை, நியாயமானது; அதே நேரத்தில், அவசரகதியில் ,நடைமுறைப்படுத்த முயற்சிப்பது தான் தவறு'என, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும்கொந்தளிக்கின்றனர். இது குறித்து,
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கதலைவர், தியாகராஜன் கூறியதாவது:
அரசு பள்ளிகளில், ஆகஸ்ட் வரை, மாணவர்சேர்க்கை நடக்கிறது. மாணவர் எண்ணிக்கைவிவரம், ஆகஸ்ட் இறுதியில் தான் தெரியும். அதற்குள், இப்போதுள்ள மாணவர்எண்ணிக்கையை வைத்து, உபரி ஆசிரியரை,எப்படி கணக்கிட முடியும். மேலும், கடந்தஆண்டு, ஆகஸ்ட் மாத நிலவரத்தின்அடிப்படையில், உபரி ஆசிரியரை கணக்கிடுவதாக, எங்களுக்கு தகவல் வருகிறது. கடந்த, மே, 31ம் தேதி, அதிகளவில், ஆசிரியர் ஓய்வு பெற்றுள்ளனர்.இந்த தேதியில் உள்ள ஆசிரியர் காலிபணியிடங்கள் அடிப்படையிலும், ஆகஸ்ட்இறுதியில் உள்ள மாணவர் எண்ணிக்கைஅடிப்படையிலும், உபரி ஆசிரியர் குறித்து,கணக்கெடுக்க வேண்டும். உபரி ஆசிரியரை,பணியிட மாற்றம் செய்வதில், தவறில்லை;இந்த நடவடிக்கையை, வரவேற்கிறோம்.அதே நேரத்தில், முடிந்த அளவிற்கு,தற்போது பணிபுரியும் ஆசிரியருக்கு, பாதிப்புவராத அளவிற்கு, கல்வித்துறை நடவடிக்கைஎடுக்க வேண்டும்.இவ்வாறு, தியாகராஜன்கூறினார்.
எனினும், ஆசிரியர்களும், எப்போது, டிரான்ஸ்பர்' வருமோ என, அச்சத்தில் உள்ளனர். இது குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது:
நான்கு மாணவர்;ஐந்து மாணவர் குறைவாக இருந்தால், அதை ஒரு காரணமாக வைத்து, உபரி ஆசிரியர் என, கணக்கிட மாட்டோம். மாணவர், மிகமிக குறைவாக உள்ள பள்ளிகளில், ஆசிரியர் அதிகமாக இருந்தால், அவர்களைத் தான்,வேறு பள்ளிகளுக்கு மாற்றுவோம்.
எனினும், ஆசிரியர்களும், எப்போது, டிரான்ஸ்பர்' வருமோ என, அச்சத்தில் உள்ளனர். இது குறித்து, கல்வித்துறை வட்டாரம் கூறியதாவது:
நான்கு மாணவர்;ஐந்து மாணவர் குறைவாக இருந்தால், அதை ஒரு காரணமாக வைத்து, உபரி ஆசிரியர் என, கணக்கிட மாட்டோம். மாணவர், மிகமிக குறைவாக உள்ள பள்ளிகளில், ஆசிரியர் அதிகமாக இருந்தால், அவர்களைத் தான்,வேறு பள்ளிகளுக்கு மாற்றுவோம்.
இந்த விவகாரத்தில், இன்னும் முடிவுஎடுக்கவில்லை. அதற்குள், ஆசிரியர்கள்,தேவையில்லாமல் பதற்றம் அடையவேண்டாம்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரம்தெரிவித்தது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை