Ad Code

Responsive Advertisement

புதுவையில் 29-இல் யுஜிசி நெட் தேர்வு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மூலம் புதுச்சேரியில் வரும் 29-ஆம் தேதி பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (நெட்) நடைபெறவுள்ளது.
இதில் 4,984 பேர் பங்கேற்க உள்ளனர். இது குறித்து புதுவை பல்கலைக்கழகத்தின் யுஜிசி நெட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் அரிகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு மூலம், பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (நெட்) ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு வரும் 29-ஆம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது.

புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி, இதயா கல்லூரி, போப் ஜான்பால் கல்லூரி, ஆச்சார்யா பொறியியல் கல்லூரி, சாரதா கங்காதரன் கலைக் கல்லூரி ஆகிய 6 துணைத் தேர்வு மையங்களில் இத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை, புதுவை பல்கலைக்கழக துணை மையங்களில் மொத்தம் 4,984 பேர் எழுதுகின்றனர். முதல் தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரையும், இரண்டாம் தாள் காலை 10.45 முதல் மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மூன்றாம் தாள் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடக்கிறது. இது தொடர்பான மேலும் விவரங்களை புதுவை பல்கலைக்கழக இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement