Ad Code

Responsive Advertisement

பள்ளி சத்துணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் மயக்கம்

விழுப்புரம் அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரத்தை அடுத்த மேல்காரணை கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் வழக்கம் போல் மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டது. அப்போது சுமார் 100 மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement