Ad Code

Responsive Advertisement

மலிவு விலையில் 'அம்மா' மளிகை : ரூ.1,000க்கு வழங்க பரிசீலனை..

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, மலிவு விலையில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும், 'அம்மா' மளிகை திட்டத்தை துவங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

அ.தி.மு.க., அரசால், மலிவு விலை 'அம்மா' உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பஸ் பயணிகள் வசதிக்காக, 10 ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட, 'அம்மா' குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு துறை மூலம் பல இடங்களில் மலிவு விலை பண்ணைபசுமை காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இத்திட்டங்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.சமீபத்தில், தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனம் சார்பில், மலிவு விலையில், 'அம்மா' உப்பு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. விரைவில், 'அம்மா'தேயிலை விற்பனை திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என, தெரிகிறது.
ஏற்கனவே, சென்னைமாநகராட்சி பகுதியில், 'அம்மா' வாரச்சந்தை, 'அம்மா' திரையரங்கம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவற்றை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.இந்த நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மலிவு விலையில், 'அம்மா' மளிகை பொருட்களை விற்பனை செய்யும் ஆராய்ச்சியில், அரசு இறங்கியுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டப்படி, 1,000 ரூபாய்க்கு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், மஞ்சள், தனியா, சீரகம், கடுகு, முந்திரி, வெல்லம்,சர்க்கரை, தேயிலைத் தூள், உப்பு என, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படும். முறைகேடுகள் நடக்காமல் இருக்க,இப்பொருட்களை நுகர்வோர் மட்டுமே பிரித்து பார்க்கும் வகையில், பாலிதீன் பைகளால், 'பேக்கிங்' செய்யப்படும்.
ரேஷன் கடைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக, அவற்றை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் துவங்கவுள்ள, 'அம்மா' வார சந்தையில், சோதனை அடிப்படையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement