Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்: நாளை முதல் பள்ளிகளுக்கு வினியோகம்...

.மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் நாளை முதல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 2013-14ம் கல்வி ஆண்டின் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் துவங்கப்பட உள்ளது. அதனையொட்டி 2014-15ம் கல்வி ஆண்டிற்கான இலவச கல்வி உபகரணங்களை, பள்ளி திறந்ததும் வழங்கும் வகையில் பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.


அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று 9ம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள் வந்தடைந்தன.
உயர் நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான பாட புத்தகம் முழுமையாக வந்தடைந்ததையொட்டி நாளை முதல் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
அதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டார பள்ளிகளுக்கு நாளை 19ம் தேதியும், பண்ருட்டி 20ம் தேதி, சிதம்பரத்திற்கு 21ம் தேதி வழங்கப்படுகிறது. அதேப்போன்று விருத்தாசலத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் அதே தேதிகளில் முறையே விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்டார பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement