Ad Code

Responsive Advertisement

வருமானம், ஜாதிச்சான்று வினியோகத்தில் அலைக்கழிப்பு: மாணவர்கள் பரிதவிப்பு

"தஞ்சையில், ப்ளஸ் 2 தேர்ச்சிக்கு பிறகு, மேற்படிப்பில் சேர்வதற்கு தேவைப்படும் வருமானம், சாதிச்சான்று உள்ளிட்ட சான்றுகளை வழங்குவதில் இணையவழி சேவை மைய அலுவலர்கள் அலைக்கழிப்பு செய்கின்றனர். இதனால், சான்றுகள் உரிய நேரத்தில் கிடைக்காமல், பரிதவிக்க நேரிட்டுள்ளது' என, தஞ்சை கலெக்டரிடம், மாணவ, மாணவியர் புகார் கூறினர்
நடப்பாண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதால், இதில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மேற்படிப்பு பிரிவுகளில் சேர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இன்ஜினியரிங், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து, அனுப்பி வைக்கும் பணியில் மாணவ, மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்தகைய விண்ணப்பத்துடன் முதல் பட்டதாரி சான்று, வருமான சான்று, சாதிச்சான்று ஆகிய சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். சான்றுகளை பெறுவதற்காக, தஞ்சை கலெக்டர் அலுவலகத்திலுள்ள இணையவழி சேவை மையத்தில் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு, பதிவு செய்ததற்கு உரிய ஒப்புகை ரஷீதும் உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தரப்பட்டு வருகிறது.

விண்ணப்பம் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் வசிப்பிட எல்லைக்கு உள்பட்ட வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆகியோருக்கு அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தி முடிவில் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகம் மூலம் இணையவழி சேவை மையத்துக்கு சான்றுகள் மீண்டும் வந்து சேர்ந்து விடும். அதன்பிறகு மாணவ, மாணவியர் சான்றிதழ்களை மையத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அனைத்து நடைமுறைகளையும் தாண்டி, சான்றிதழ் பெறுவதற்கு காலதாமதமாகி வருகிறது.மேலும், இணையவழி சேவை மையத்தில் கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டுள்ளது எனக்கூறி அலுவலர்கள் அலைக்கழிப்பு செய்வதாகவும், இதனால், மேற்படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, இணைய வழி சேவை மைய அலுவலர்கள் மீது புகார் கூறி, சான்றுகளை கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர், பெற்றோர்கள் தஞ்சை கலெக்டர் சுப்பையனிடம், நேற்று முன்தினம் முறையிட்டனர். இதனைத்தொடர்ந்து, மாணவ, மாணவியர் நலன் கருதி, விரைந்து சான்றிதழ்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், பரபரப்பு முடிவுக்கு வந்தது.
Click Here



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement