Ad Code

Responsive Advertisement

தமிழக அமைச்சரவையில் இருந்து கேபி முனுசாமி நீக்கம்...

அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் கே.பி.முனுசாமி நீக்கப்படுகிறார் என்றும்,  அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பொறுப்பில், இடைப்பாடி கே.பழனிச்சாமி (சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்
. என்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதுபோல், கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும், கே.பி.முனுசாமி, இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து கேபி முனுசாமி நீக்கப்பட்டுள்ளார். முனுசாமி கவனித்து வந்த தொழிலாளர் நலத்துறையை அமைச்சர் மோகன் கூடுதலாக வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் அமைச்சார் ஜெயலலிதாவின் பரிந்துரையை அடுத்து ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். கட்சியின் பொறுப்பில் இருந்து  கேபி முனுசாமி இன்று நீக்கப்பட்ட நிலையில் அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement