தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, ஒட்டுமொத்தமாக மாநில அளவில் அனைத்து மொழிப் பாடங்களையும் எடுத்து படித்தவர்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.

முதல் இடத்தை 1,193 மதிப்பெண்கள் எடுத்து 3 மாணாக்கர் பிடித்துள்ளனர். அதில்,

1. ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதி, பாரதி வித்யா பவன் பள்ளி மாணவி விஷ்ணுபிரியா சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்தவர்.

2. திருச்சி எஸ்வி ஹிந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆனந்தி சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்.

3. சுசாந்தி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவியாவார். இவர் தமிழை மொழிப் பாடமாக எடுத்து படித்துள்ளார்.

இதே போல மாநில அளவில் 7 மாணாக்கர் 1192 மதிப்பெண்களை பெற்று 2ம் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களின் விவரம் :

1. அகன்ஷா அஜித் - முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி. இவர் சமஸ்கிருதத்தை மொழிப் பாடகமாக எடுத்துப் படித்துள்ளார்.

2. எஸ். சிவராம் - மதுரை மாவட்டம் ஜீவனா உயர்நிலைப் பள்ளி மாணவர். பிரெஞ்ச் மொழிப் பாடத்தை படித்தவர்.

3. ஷாலினி - ஈரோடு, திண்டல் பகுதியில் உள்ள பாரதி வித்யா பவன் பள்ளி மாணவி. சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக படித்தவர்.

4. எம். ஸ்ரீவித்யா - சென்னை ஸ்ரீ அகோபிலமடப் பள்ளியில் சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்.

5. ஏஎல் அலமேலு - தருமபுரி மாவட்டம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி. தமிழை மொழிப் பாடமாக எடுத்துப் படித்தவர்.

6. எஸ். ஸ்ரீராம் - சேலம் மாவட்டம் கன்னக்குறிஞ்சி கோல்டன் கேட்ஸ் பள்ளி மாணவர். பிரெஞ்ச் மொழிப் பாடம்.

7. கே. நிரோஷினி - நாமக்கல், பொதுப்பட்டி க்ரீன் பார்க் பெண்கள் பள்ளி மாணவி. பிரெஞ்ச் மொழிப் பாடம்.

மாநில அளவில் 1,191 மதிப்பெண்களை எடுத்து 8 மாணாக்கர் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

1. துளசிராஜன் - நாமக்கல், பொதுப்பட்டி க்ரீன் பார்க் பள்ளி மாணவர். தமிழ் மொழிப் பாடம்.

2. எஸ். நித்யா - செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம், பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி. தமிழ் மொழிப்பாடம்.

3. ஆர்.எஸ். பிரியதர்ஷினி - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி. பிரெஞ்ச் மொழிப் பாடம்.

4. எஸ்.என். மொஹம்மது ஜவீத் - புதுச்சேரி, மூலக்குளம் பிரிம்ரோஸ் உயர்நிலைப் பள்ளி, பிரெஞ்ச் மொழிப் பாடம்.

5. கே. பொன்சங்கர் - ஈரோடு ஏஇடி உயர்நிலைப் பள்ளி, சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக படித்த மாணவர்.

6. கே. சுமித்ரா - கோவை, ஜிடி உயர்நிலைப் பள்ளி மாணவர். பிரெஞ்ச் மொழிப் பாடம்.

7. கனக பார்த்திபன் இலக்கியா - தென்சென்னை, தி.நகர் வித்யோதயா பள்ளி மாணவி. ரஷிய மொழிப் பாடம்.

8. ஆர். அபிநயா - செங்கல்பட்டு, சேலையூர் ஸியோன் பள்ளி மாணவி, பிரெஞ்ச் மொழிப் பாடம்.