Ad Code

Responsive Advertisement

கவுன்சலிங் செல்லும்போதே கல்வி உதவித் தொகை: மாநகராட்சி முடிவு

உயர்கல்விக்கான கல்வி உதவித் தொகையை கவுன்சலிங்குக்கு செல்லும்போதே மாணவர்களுக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னைப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் முதல் 100 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் உயர் கல்விக்கு மாநகராட்சிகல்வி உதவித் தொகை வழங்குகிறது. கடந்த ஆண்டு வரை 50மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது.இந்த ஆண்டு முதல் இது 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள், தாங்கள் என்ன படிக்க விரும்பினாலும்அதற்கான செலவை மாநகராட்சி ஏற்றுக் கொள்கிறது. மருத்துவம்,பொறியியல், கலை, அறிவியல் என எந்தப் படிப்புக்கும் அரசுகல்லூரிக் கட்டணம் வழங்கப்படும். மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக்குரூ.62,500, பொறியியல் படிப்புக்கு கல்லூரியை பொறுத்து ஆண்டுக்குசுமார் ரூ.45 ஆயிரம் முதல் ரூ.62 ஆயிரம் வரை வழங்கப்படும்.

ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டில் (மேனேஜ் மென்ட் கோட்டா)சேர்ந்தால், அதற்கு செலுத்த வேண்டிய கூடுதல் கட்டணம்,வெளியூர்களில் தங்கிப் படிப்பதற்கான விடுதிக் கட்டணம் உள்ளிட்டசெலவுகளை மாணவர்களே செலுத்த வேண்டும்.

இதுவரை கல்லூரி படிப்பு ஆரம்பித்த பிறகுதான் மாணவர்களுக்குஉ தவித்தொகை வழங்கப்பட்டது. இதனால், மாணவர்கள் உதவித்தொகை கிடைக்குமா இல்லையா என்ற சந்தேகத்தில்,உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமலே இருந்துவிடுகின்றனர். எனவே,இந்த ஆண்டு முதல் முன்கூட்டியே உதவித் தொகை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Ad Code

Responsive Advertisement