தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில்முதல் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கையைஅதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை
பள்ளிகள் மேற்கொள்ள கல்வித் துறைஉத்தரவிட்டுள்ளது.
மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கத்தாலும்,அவை மேற்கொள்ளும் பல்வகை விளம்பரஉத்திகளாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது.இந்நிலையில், மாணவர் சேர்க்கையைஅதிகரிக்க புதிய உத்திகளைக் கையாளகல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்விஇயக்குநர், அனைத்து மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குதரமான கல்வி வழங்கவும், இடைநிற்றலைக்குறைக்கவும், மாணவர் சேர்க்கையைஅதிகரிக்கவும் தமிழக அரசு 14வகையானவிலையில்லாத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது.
எனவே, பள்ளிகள் அதன் அருகேயுள்ளகுடியிருப்புகளில் உள்ள குழந்தைகளைஅரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும். இதற்காக மாணவர்சேர்க்கை தொடர்பான விளம்பரங்களைபொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில்விளம்பரம் செய்தல் வேண்டும்.
சேர்க்கை தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வழங்குவதுடன், முக்கியப்பகுதிகளில் பேனர்களை வைக்க வேண்டும்.மேலும், மாணவர் சேர்க்கை ஊர்வலத்தையும்நடத்த வேண்டும் என சுற்றறிக்கையில்கூறப்பட்டுள்ளது
Social Plugin