Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் வினியோகம் துவங்கியது...

ஆசிரியர் பயிற்சி விண்ணப்ப வினியோகம், மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது,நேற்று, 1,000 விண்ணப்பங்கள், விற்பனை ஆயின. "இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியில் சேர, நேற்று முதல், வரும் ஜூன், 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும், கடந்த ஆண்டு, கலந்தாய்வு மூலம், 2,500 இடங்கள் மட்டுமே நிரம்பின. 4,000 பேர் தான் விண்ணப்பித்தனர். இதை கருத்தில்கொண்டு, 5,000 விண்ணப்பங்களை, இயக்குனரகம் அச்சிட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால், கூடுதலாக விண்ணப்பத்தை அச்சிடவும், இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. நேற்று ஒரே நாளில், 1,000 விண்ணப்பங்கள், விற்பனை ஆனதாக, துறை வட்டாரம் தெரிவித்தது.

Ad Code

Responsive Advertisement