Ad Code

Responsive Advertisement

எம்.பி.பி.எஸ்., படிக்க மாணவர்கள் ஆர்வம் : முதல் நாளில் 12,138 விண்ணப்பம் வினியோகம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வாங்குவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டினர். முதல் நாளில், 12,138 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

கலந்தாய்வு : தமிழகம் முழுவதும், 19 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி யும் உள்ளன.
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, அகில இந்திய ஒதுக்கீடு போக, 2,172 இடங்கள் உள்ளன. பி.டி.எஸ்., படிப்புக்கு, மாநில ஒதுக்கீட்டில், 85 இடங்கள் உள்ளன. இதுதவிர, 12 சுய நிதி கல்லூரிகளில் இருந்து, 900 இடங்கள் வரை, எம்.பி.பி.எஸ்., இடங்களும், 909 பி.டி.எஸ்., இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இதற்கு, "கட் - ஆப்' மதிப்பெண் அடிப் படையில், மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகம், தமிழகம் முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியில், நேற்று துவங்கியது. காலை முதலே மாணவ, மாணவியர் 
ஆர்வமுடன் குவிந்தனர்.

சமர்பிக்க வேண்டும் : ஒரே நாளில், தமிழகம் முழுவதும், 12,138 விண்ணப்பங்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில், 1,531 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளனன. அரசின் எல்லா மருத்துவக் கல்லூரி

களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தும், விவரம் தெரியாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாணவ, மாணவியர், சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்தனர்.விண்ணப்பங்கள், இம்மாதம், 30ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன், 2ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Ad Code

Responsive Advertisement