தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும்மாணவர்களில் 50 சதவீதம் பேர் எஸ்சி,எஸ்டி மாணவர்களாக உள்ளனர். அதே போல்பிளஸ் 2 தேர்வில் 70 சதவீதத்துக்கும்மேற்பட்ட எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்ச்சிபெறுகின்றனர். ஆனால், இதில் 20 சதவீதம்பேர்தான் உயர்கல்வி படிக்கச்
செல்கின்றனர். மீதமுள்ள 50 சதவீதத்துக்கும்மேற்பட்ட மாணவர்கள் படிப்பைத் தொடரவசதி இல்லாமல் மேல்நிலைப் பள்ளியுடன்கல்வியை நிறுத்தி விடுகின்றனர்.
எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அரசுக்கல்லூரிகளில் கிடைக்கிற இடங்கள்போதுமானதாக இல்லை என்பதும் தனியார்கல்லூரிகளில் படிக்க வசதி இல்லைஎன்பதும் இதற்கு காரணம். இதனால் எஸ்சி,எஸ்டி மாணவர்களில் உயர்கல்விபெறுவோரின் சதவீதத்தை அதிகரிக்கஉயர்கல்வி படிப்ப தற்கான கட்டணத்தைஅரசு வழங்கினால் நிறைய மாணவர்கள்படிக்க முன்வருவார்கள் என்றும் அதே போல்உயர்கல்வி பெறுவோர்களின் சதவீதம்உயரும் என்றும் மத்திய அரசு சுயநிதிகல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கானகட்டணத்தை அரசு வழங்கும் என்றும்அறிவித்தது.
இதையொட்டி தமிழக அரசு 2012-ம் ஆண்டுஅரசாணை எண் 92-ன்படி குடும்ப ஆண்டுவருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல்இருக்கிற எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்கள்சுயநிதி கல்லூரி மற்றும் சுயநிதி பாடப்பிரிவுகளில் பொறியியல், மருத்துவம், கலை,அறிவியல் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள்கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை.இவர்களுக்கான கட்டணத்தை அரசேஅளிக்கும் என்று அறிவித்தது. இதற்காககடந்த ஆண்டு ரூ.380 கோடியும், இந்தஆண்டு ரூ.600 கோடியும் ஒதுக்கியுள்ளதாகக்கூறப்படுகிறது.
வற்புறுத்தும் கல்லூரிகள்…
ஆனால், அரசு நிதியுதவி பெறும் கலைஅறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும்சுயநிதிப் பாடப்பிரிவுகளில் படிக்கும் எஸ்சி,எஸ்டி மாணவர்களை கட்டணம்கட்டச்சொல்லி கல்லூரிகள் வற்புறுத்திவருகின்றன. அரசு நிதியுதவி பெறும்கல்லூரிகளின் முதல்வர்கள் அரசாணை எண்: 92 தங்களுக்குப் பொருந்தாது என்றுகூறுகின்றனர்.
இதனால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாணை 92-ன்படி கட்டண விலக்குகோரும் மாணவர்களைத் தேர்வு எழுதஅனுமதி மறுத்தல், அகமதிப்பெண்களைக்குறைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.
தமிழக அரசாணை 92-ல் சுயநிதி கல்லூரிகள்மற்றும் சுயநிதி பாடப் பிரிவுகளில் படிக்கும்எஸ்சி, எஸ்டி மாணவர்கள் கட்டணம்செலுத்த தேவையில்லை. அப்படி கட்டணம்செலுத்தியிருந்தாலும் திரும்ப அளிக்கவேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், இதுசுயநிதி கல்லூரிகளுக்கு மட்டும்தான்பொருந்தும். சுயநிதி பாடங்களை நடத்தும்எங்களுக்கு பொருந்தாது என்கின்றன அரசுஉதவி பெறும் கல்லூரிகள்.
விளக்கம் கேட்டிருக்கிறோம்…
இதுகுறித்து கல்லூரிக் கல்விஇயக்குநரகத்தில் விசாரித்தால், மாநிலஅரசிடம் விளக்கம் அளிக்க கோரியிருப்பதாககூறுகின்றனர். ஆதி திராவிடர் நலத்துறைசெயலர் கண்ணகி பாக்கியநாத னிடம்பேசியபோது, “இந்த அரசாணை 92 சுயநிதிமற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்குபொருந்தும்” என்றார்.
இப்பிரச்சினைக்கு தமிழக அரசு உடனடியாகஒரு தீர்வை அளிக்க வேண்டும் என்பதேமாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Social Plugin