Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி சட்ட இட ஒதுக் கீட்டில் மாணவர்களை சேர்க்க, விண்ணப்பத்துடன் நான்கு ஆவணங்கள் கண்டிப்பாக இணைக்க வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தனியார் பள்ளிகளில், 2014-15ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். அதற்கான விண்ணப்பம், தனியார் பள்ளிகளில் வழங்கப்படுகிறது; 18ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.ஒரு பகுதியில், குறிப்பிட்ட தூரத்துக்குள் அரசு பள்ளி இல்லாத பட்சத்தில், அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்பது பாதிக்கிறது. சொற்ப எண்ணிக்கையில் உள்ள அக்குழந்தைகளுக்காக, தனியாக ஒரு அரசு பள்ளியை உருவாக்காமல், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அக்குழந்தைகளை சேர்க்கவும், அவர்களுக்கான கல்வி செலவை ஏற்கும் வகையிலும், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீடு திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஒரு குழந்தை கல்வி கற்பது எந்த காரணத்தாலும் தடைபடக்கூடாது என்ற நோக்கமும் இதற்கு முக்கிய காரணம். இதன் அடிப்படையில், ஏழை குழந்தைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தனியார் பள்ளி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர், விண்ணப்பத்துடன் நான்கு ஆவணங்களை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் இருந்து ஒரு கி.மீ.,க்குள் வசிப்பதற்கான இருப்பிட சான்று, ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் என்பதற்கான வருமான சான்று, குழந்தையின் பிறந்த நாள் சான்று மற்றும் ஜாதி சான்று ஆகியவை கட்டாயம் தர வேண்டும். இவற்றை முறையாக சமர்பித்தால் மட்டுமே, விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும், என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியருக்கு, அவர்கள் படித்த பள்ளியிலேயே, மதிப்பெண் சான்று வழங்கும்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, வேலைவாய்ப்பு ஆணைய வெப்சைட்டில் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும், பிரத்யேக, "யூசர் ஐடி' மற்றும், "பாஸ்வேர்ட்' வழங்கப்படுகிறது. பதிவு எண்ணை குறிப்பிட்ட வெப்சைட்டில் பதிவு செய்யும் போது, மாணவர் பற்றிய முழு விவரமும் அதில் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவரின், ரேஷன் கார்டு எண், ஜாதி விவரம், மதிப்பெண் சான்று ஆகியவற்றை பரிசோதித்து, பள்ளி நிர்வாகம் மூலம், வேலைவாய்ப்பக பதிவேட்டில், இன்டர்நெட் மூலம் பதிவு செய்து, அட்டை வழங்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரிகளுக்கு, வேலைவாய்ப்பு பதிவு குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு அதிகாரி கூறியதாவது: வரும், 21ம் தேதி, பிளஸ் 2வில் வெற்றி பெற்றவர்களுக்கு, மதிப்பெண் மற்றும் மாற்றுச்சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பள்ளியிலே வேலைவாய்ப்பக பதிவை நிறைவு செய்யும் வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மதிப்பெண் சான்று வழங்கும் தேதியில் இருந்து, 15 நாட்களுக்கு, ஒரே சீனியாரிட்டியில் பதிவு செய்யப்படும். பள்ளியில் வேலைவாய்ப்பு பதிய முடியாதவர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யலாம். ஆன்-லைன் வசதியில்லாத பள்ளியில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் உதவியுடன், அருகில் உள்ள பள்ளியில், பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

Ad Code

Responsive Advertisement