Ad Code

Responsive Advertisement

தஞ்சை விழாவில் அமைச்சர் பெருமிதம் 3 ஆண்டில் 63,801 மாணவருக்கு லேப்-டாப்

: ""கடந்த 3 ஆண்டுகளில், அ.தி.மு.க., ஆட்சியில் தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 63,801 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது,'' என, தஞ்சையில், சாதனை விளக்க ஃபோட்டோ கண்காட்சி துவக்க விழாவில், அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.

தஞ்சையில், தமிழகத்தில், கடந்த 3 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி சாதனை விளக்க ஃபோட்டோ கண்காட்சி பழைய பஸ் ஸ்டாண்டில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இதன் துவக்க விழாவில் பங்கேற்று, வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:
தமிழகத்தில் கல்வித்துறையில் ஏழை, எளியோர் குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் கல்வியறிவை பெற வேண்டும் என, முதல்வர் ஜெ., அனைத்து நடவடிக்கைகளையும் மிகுந்த அக்கறையுடன் மேற்கொண்டுள்ளார். இதன் பயனாக அனைத்து தரப்பு குழந்தைகளும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில், அ.தி.மு.க., ஆட்சியில் தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் 63,801 பேர்களுக்கு அரசின் சார்பில் இலவச லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் படிப்பில் ஆர்வம் அதிகரிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, ப்ளஸ் 1 மாணவ, மாணவியருக்கு 21.36 கோடி ரூபாய் மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 257 பேர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் பல வகை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 18 ஆயிரத்து 506 பயனாளிகளுக்கு 39.53 கோடி ரூபாய் மதிப்பில் காப்பீடு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. செங்கிப்பட்டியில், அரசு இன்ஜினியரிங் கல்லூரி தொடங்கப்பட்டு, புதிய கட்டிடத்தில் விரைவில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேராவூரணியில் பல்கலை., உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருவையாறில் புதிய அரசு தொழில்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டு, 75 லட்சம் ரூபாய் மதிப்பில் கண்ணந்தங்குடி மேலையூர் சிங்கனேரியை புனரமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. தஞ்சை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல, கடந்த 3 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகத்துக்கு மட்டுமின்றி, தஞ்சை மாவட்டத்துக்கும் எண்ணற்ற, மக்களுக்கு பயனளிக்கும் அரிய திட்டங்களை முதல்வர் ஜெ., அளித்து வருகிறார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் ரங்கசாமி, ரத்தினசாமி, மாநகராட்சி மேயர் சாவித்திரி, துணைமேயர் மணிகண்டன், மாவட்ட பஞ்., தலைவர் அமுதா, மாவட்ட பால்வளத்துறை தலைவர் காந்தி, நிலவள வங்கித்தலைவர் துரை திருஞானம், விவசாய பிரிவு மாநில தலைவர் கோவிந்தராஜன், வக்கீல் பிரிவு இணை செயலாளர் தங்கப்பன், நகர இளைஞரணி துணை செயலாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement