Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூனில் சிறப்பு துணைத்தேர்வு!

சென்னை: 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூனில் சிறப்பு நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள்  அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.

Ad Code

Responsive Advertisement