Ad Code

Responsive Advertisement

நாளை காலை +2 தேர்வு முடிவு...





பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறையின், நான்கு இணையதளங்களில் வெளியிடப்படுகிறது
. 8.26 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு முடிவை, ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச், 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. 2,242 மையங்களில் நடந்த தேர்வை, 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

இதன் முடிவை, நாளை காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை வெளியிடுகிறது. தேர்வுத் துறையின், நான்கு இணையதளங்களில், தேர்வு முடிவு வெளியிடப்படுவது உடன், நூலகங்கள், அந்தந்த பள்ளிகளிலும், தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்க, பதிவு எண்
களுடன், பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, 88.1 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டும், இதே அளவிற்கோ அல்லது 2 சதவீதம் கூடுதலாகவோ தேர்ச்சி இருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முடிவு வெளியாகும் இணையதள முகவரிகள்:
www.tnresults.nic.in / www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in / www.dge3.tn.nic.i

பி.எஸ்.என்.எல்., சேவை : பி.எஸ்.என்.எல்., மொபைல் சந்தாதாரர்கள், தங்கள் மொபைல்போனில், தேர்வு முடிவை அறியலாம். இதற்கான வசதியை, பி.எஸ்.என்.எல்., செய்துள்ளது. இதற்கு, நேற்றில் இருந்தே, பதிவு செய்து கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, HSC / REGISTOR NO ஆகியவற்றை பதிவு செய்து, 53576 என்ற எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், தேர்வு முடிவு அறிவிக்கப்படும். பதிவு செய்ய கட்டணம் இல்லை. தேர்வு முடிவை தெரிவிக்கும் சேவைக்கு, மூன்று ரூபாய் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என, பி.எஸ்.என்.எல்.,
அறிவித்துள்ளது.

Ad Code

Responsive Advertisement