Ad Code

Responsive Advertisement

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்

பிரதமர் நரேந்திர மோடி

முதல் 100 நாட்கள் ஆட்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டிய 10 முக்கிய விஷயங்களை அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


அந்த 10 முன்னுரிமைகளாவன:

1.மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கையை வளர்த்தெடுத்தல்.

2. புதிதான கருத்துக்கள் மற்றும் சுதந்திரமாக பணியாற்றுதலை வரவேற்பது.

3. கல்வி, சுகாதாரம், நீராதாரம், எரிசக்தி, சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தல்.

4. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் மின் ஏலத்தை வளர்த்தெடுத்தல்.

5. அமைச்சகங்களுக்கு இடையிலான விவகாரங்களைக் கவனிக்க சிறப்பு ஏற்பாடு.

6. அரசு எந்திரத்தில் மக்கள் நலனுக்கான அமைப்பை ஏற்படுத்துதல்.

7. பொருளாதார விவகாரங்களுக்கு உடனுக்குடன் முன்னுரிமை அளித்தல்.

8. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுச் சீர்திருத்தங்கள்.

9.அரசின் கொள்கையை குறித்த காலத்தில் செய்து முடித்தல்.

10. அரசுக் கொள்கைகளில் நிலையான போக்கைக் கடைபிடித்தல் மற்றும் திறமையாக செயல்படுதல்.
இந்த 10 முன்னுரிமைகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் மாநில அரசுகள் முன்மொழியும் விவகாரங்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்குமாறு நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றச் செயல்பாடு குறித்து வெங்கையா நாயுடு கூறுகையில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், சபாநாயகர் ஜூன் 6ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement