Ad Code

Responsive Advertisement

தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் பணிக்குதேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள்பணிக்கு வராவிட்டால்அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என,
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி,பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்துஅவர் கூறியதாவது: தமிழகத்தில்வரும், 24ம் தேதி, 39லோக்சபா தொகுதிகளுக்கும்ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும்ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 60,418 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மின்சாரம்குடிநீர் : இனிபுதிதாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படாது. ஒரு ஓட்டுச் சாவடியில்அதிகபட்சம், 1,500வாக்காளர்கள் இருப்பர். புதிதாக வாக்காளர் சேர்க்கப்படும் போதுஅந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. "ஓட்டுச் சாவடிகளில்மின்சாரம்குடிநீர்கழிப்பறை வசதி இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காகபடிக்கட்டு அருகே சாய்தளம் அமைக்க வேண்டும்என,அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிரந்தரமாக,சாய்தளம் அமைக்க முடியாத ஓட்டுச் சாவடிகளில்தற்காலிக சாய்தள வசதி ஏற்படுத்த வேண்டும். தேர்தலுக்காக, 70ஆயிரம் கன்ட்ரோல் யூனிட்கள், 1.25 லட்சம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு தொகுதியில்அதிகபட்சமாக, 63 வேட்பாளர்கள் போட்டியிட்டால்நான்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த முடியும். அதற்கு மேல்வேட்பாளர்கள் போட்டியிட்டால்ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரம் தேவைப்பட்டால்,கேரளாகர்நாடகம் எனஅருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேர்தல் பணியில், 3 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு,முதல் கட்ட பயிற்சி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சிவேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதும் நடத்தப்படும்.


ஒழுங்கு நடவடிக்கை : மூன்றாவது கட்ட பயிற்சிஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் நடைபெறும். தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்பணிக்கு வராமல் இருந்தால்அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீதுகுற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும்மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விதிகள் உள்ளன. இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement