Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்...

தமிழகத்தில் தேர்தல் பணி யில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப் படுவர் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 
தமிழகத்தில் தேர்தல் பணியில் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வாக்குப் பதிவு தொடர்பாக 3 கட்ட பயிற்சி அளிக்கப்படுகின்றன. முதல்கட்ட பயிற்சி முடிந்துள்ளது. 2-வது கட்ட பயிற்சி வரும் 5-ம் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி தேர்தலுக்குமுந்தைய நாளும் நடத்தப்படும்.

தேர்தல் பணிக்கு வராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாக்காளர்களைக் கொண்ட துணை வாக்காளர் பட்டியல், வரும் 7-ம் தேதி தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும். மொத்தம் 60,418 வாக்குச்சாவடிகள் அமைக்கப்ப டுகின்றன.

வாக்குச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், கழிப்பிடம், தற்காலிக சாய்தள பாதை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். ஒரு தொகுதியில் 16 வேட்பாளர் களுக்கு மேல் போட்டியிட் டால் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத் தப்படும். தற்போது 1.25 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் தயாராக உள்ளன. இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement