Ad Code

Responsive Advertisement

கூட்டுறவு சங்க தேர்தல்: பாதுகாப்பு வேண்டும்

தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழக அரசு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், சென்னையில், நேற்று அளித்த பேட்டி:தற்போது, 
பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கும், 7,297 பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. ஆனால், கூட்டுறவுத் துறையில், 450 சார் - பதிவாளர்கள்; 600 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட, 1,150 பணியிடங்கள் காலியாக உள்ளன. பணியில் உள்ள பலர், புதியவர்களாகவும், பெண்களாகவும் உள்ளனர். அதனால், தேர்தல் பணியில் அனுபவம் உள்ள, பிற துறை ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, வேட்புமனு தாக்கல் மற்றும் ஓட்டு எண்ண, வட்டார அளவில் மையங்களை அமைத்து, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் பணி ஊழியர்களுக்கு, இயல்பு பணிகளில் இருந்து விலக்களித்து, கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.

 புதிய ஊழியர்களுக்கு, தேர்தல் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும்.தமிழகத்தில், அந்தந்த மாவட்ட கலெக்டர்களை, தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து, கூட்டுறவு சங்க தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். இந்த கோரிக்கைகளைஅரசு ஏற்காவிட்டால், தேர்தல் பணியை புறக்கணிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement