Ad Code

Responsive Advertisement

மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்' என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு பி.எட். படித்தவர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றுகின்றனர். ஆனால் தனியார் மெட்ரிக் மற்றும் மழலையர் பள்ளிகளில் பட்ட படிப்புடன், பி.எட். படித்து, தகுதி தேர்வின்றி பணியாற்றுகின்றனர்.இவர்கள் மழலையர் பள்ளி மற்றும் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்த அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்..

புதிய பாடத்திட்டம்: இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் பள்ளிகளில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களை முறைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை, ஆசிரிய பணியாற்றுவோரின் கற்பித்தல் திறனை மேம்படுத்த துவக்க கல்வியில் டிப்ளமோவை (டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷன்) தபால்வழியில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடத் திட்டங்களை 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூல்' (என்.ஐ.ஓ.எஸ்.) வழங்குகிறது. இத்திட்டத்தில் செப்.15க்குள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் சேர வேண்டும். இவர்களுக்கு அக்டோபர் முதல் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.ஆன்-லைன் விண்ணப்பம்: இக்கல்வியில் சேர விரும்புவோர் dled.nios.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் சேர்ந்து படிப்பவர்கள் மட்டுமே மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் அடுத்த ஆறு மாதங்களுக்கு வேலை செய்யலாம். இக் கல்வி திட்டத்தில்சேராமல், பணி செய்வது கண்டறியப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் மெட்ரிக் பள்ளிகளை எச்சரித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement