Ad Code

Responsive Advertisement

கல்வி கடன் வேண்டுமா? 'பான் கார்டு' வாங்குங்க!

'கல்வி கடன் பெற, 'பான் கார்டு' அவசியம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

பிளஸ் 2 தேர்வு முடிந்து, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்காக, வங்கிகளை அணுக துவங்கியுள்ளனர். அவ்வாறு அணுகுவோருக்கு, சில அடிப்படை விஷயங்கள் தெரிவதில்லை என, வங்கி அலுவலர்கள் கூறுகின்றனர். முக்கியமாக, மாணவர்கள், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். பெற்றோரின் பான் கார்டும் தேவை.

பான் கார்டு இல்லாத பெற்றோர் மற்றும் மாணவர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பித்தால், ஒரு மாதத்திற்குள் கிடைத்து விடும் என, ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement