Ad Code

Responsive Advertisement

TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீர் மாற்றம். - தினகரன் செய்தி


ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீரென மாற்றம்
செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரி விபு நய்யார் பணியாற்றி வந்தார். இந்நிலையில்,

இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்து தற்போது விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்க உள்ளது.

தேர்வு நடத்துவது ெதாடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யாருக்கும், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாககூறப்படுகிறது.இதனால், தகுதித் தேர்வு அட்டவணை வெளியிடுவதை விபுநய்யார் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இதையடுத்து, விபுநய்யாரை டான்சிக்கு மாற்றி அரசு நேற்று உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக உள்ளாட்சி நிர்வாகத்துறையின் பொறுப்பு அதிகாரியாக உள்ள காகர்லா உஷா ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று மாலை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், உள்ளாட்சித் துறையுடன் தொழில் துறையின் பொறுப்பை கவனித்து வந்தார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்புடன் சேர்த்து 3 துறைகளை இனி கவனிப்பார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement