Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க TRB உத்தரவு.

சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில்,

  மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) ஏப்., அல்லது மே மாதம் நடத்த டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி பிப்.,13 முதல், அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை சார்பில் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வு குறித்த, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை, பிப்.,3ல் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால் 'பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியதால் டி.ஆர்.பி., கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்க வேண்டாம்,' என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரின் வாய்மொழி உத்தரவால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு டி.ஆர்.பி., மற்றும் கல்வித்துறை அதிகாரிக்கு இடையே நிலவிய 'ஈகோ' யுத்தம் தான் காரணம் என தகவல் வெளியாகியது.

இந்நிலையில், சி.இ.ஓ.,க் களுக்கு பதில் நேர்முக உதவியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த டி.ஆர்.பி., முடிவு செய்தது. இதுதொடர்பான கூட்டம் சென்னையில் இன்று (பிப்.,10) நடக்கிறது. இதில் டி.ஆர்.பி., தலைவர் விபு நாயர், இயக்குனர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை உயர் அதிகாரி கவனமின்றி சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தை டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது.

இதனால் அந்த அதிகாரி அதிருப்தி அடைந்து கூட்டத்தில் பங்கேற்க சி.இ.ஓ.,க்களுக்கு மறைமுக தடை விதித்தார். இதனால் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்களை அழைத்து டி.ஆர்.பி., இன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது," என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement