Ad Code

Responsive Advertisement

TET - 2017 :விண்ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப் படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய விவரம் விரைவில் இணைய தளத்தில் வெளியிடப்படும் - TRB

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 6-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது..தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.

அதன்படி,

 * இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (தாள்-1) ஏப்ரல் 29-ம்தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

*பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

*இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை வழங்கப்படும்.

*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 23-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

*விண் ணப்ப விளக்கவுரை, விண்ணப்பம் வழங்கப் படும் மையங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய விவரம் விரைவில் இணைய தளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா அறிவித்துள்ளார்.

*இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் பயிற்சி டிப்ளமா (டிடிஎட்) முடித்தவர்கள் எழுதலாம்.

*பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை இளங்கலை பட்டப் படிப்புடன் பிஎட் முடித்தவர்கள் எழுதலாம்.

* தமிழ் இலக் கிய படிப்பைப் பொருத்தவரையில், பி.லிட். பட்டத்துடன் பிஎட் அல்லது டிடிஎட் அல்லது தமிழ் புலவர் பயிற்சி (தமிழ் பண்டிட் பயிற்சி) படித்தவர்கள் எழுதலாம்.

*தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் களும் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement