Ad Code

Responsive Advertisement

இன்று முதல் செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் !!

பேராசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதித் தேர்வான ‘செட்’ தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 12 ஆம் வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்லூரி,பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, முதுநிலை பட்டப் படிப்புடன் "நெட்' (பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு)

அல்லது "செட்' (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். அகில இந்திய அளவில் "நெட்' தேர்வை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. அதேபோல், மாநில அளவில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் ‘செட்’ தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில்,2017 ஆம் ஆண்டிற்கான ‘செட்’ தேர்வு கொடைக்கனலில் உள்ள அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு,ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்வை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம். இந்த தேர்வுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்கத் தவறியாதவர்கள், அபராதமாக ரூ.300 செலுத்தி மார்ச் 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

"செட்' தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு ரூ.1,250-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500-ஆகவும் தேர்வுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,நெட் தேர்விற்கு 500 ரூபாயாக இருந்த தேர்வு கட்டணம் 600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு அன்னைத் தெரசா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement