Ad Code

Responsive Advertisement

‘டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் நேற்று வழங்கப்படுவதாக இருந்த, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ப்ப வினியோகம், திடீரென நிறுத்தப்பட்டது; இதனால், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகினர். தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும்; பட்டதாரி ஆசிரியர் களுக்கு, ஏப்., 30ம் தேதியும், தகுதித்தேர்வு (டி.இ. டி.,) நடத்தப்படும் என்று, தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.



இதற்கான விண்ப்பம், நேற்று முதல், வரும், 27ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.சென்னையில் இருந்து மாவட்டம் வாரியாக விண்ப்பம் அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்துக்கு, 14 ஆயிரத்து, 800 விண்ப்பங்கள் பெறப்பட்டு, 14 மையங்கள் மூலம் வழங்கப்படும் என்று, முதன்மை கல்வி அவலர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, விண்ப்பம் பெற வந்த ஆசிரியர்களுக்கு, நேற்று வழங்கவில்லை.

விண்ப்பங்கள் வைக்கப்பட்டிருந்த, திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, மற்ற மையங் களுக்கு அவை அனுப்பி வைக்கப்படவில்லை. விண்ப்பம் பெற வந்திருந்த ஆசிரியர்கள், ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து, முதன்மை கல்வி அவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசிடம் இருந்து உத்தரவு ஏது வும் வராததால், விண்ப்பம் வழங்கப்படவில்லை. மறு அறிவிப்பு வந்த பிறகே, விண்ப்பம் வழங்கப்படும்,’ என்றனர்.

நேற்று முன்தினம் பள்ளி கல்வி இயக்குனரிடம் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்ற றிக்கையில்,‘டி.இ.டி., விண்ப்பங்கள், மார்ச் முதல் வாரத்தில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், ஒவ்வொரு ஒன்றியத்திம் தேர்வு நடைபெறாத இரண்டு பள்ளிகளின் விவரத்தை அனுப்ப வேண்டும்,’ என தெரிவிக்கப்பட் டிருந்தது. இதனால், நேற்று விண்ப்பம் வழங் குவது நிறுத்தப்பட்டது.

ஆசிரியர் தரப்பில்,‘ பொதுத்தேர்வு துவங்குவது மார்ச்,2ம் தேதி; ‘டெட்’ விண்ப்பம் பெற கடைசி நாளோ, பிப்., 27ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விண்ப்ப வினியோகத்தை தள்ளிப்போடக்கூடாது,’ என்றனர்.
  

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement