Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வு ஆசிரியர் பணியிடம்; குலுக்கல் முறையில் நியமனம்

பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகளின் போது, கண்காணிப்பு பணியில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு நடக்கிறது. இதனால் தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பி அடித்தலுக்கு, அவர்கள் துணை போகின்றனர் என்ற குற்றச்சாட்டு, சமீப காலமாக வலுத்துள்ளது.


ஒரு சில மையங்களுக்கு, ஒரே ஆசிரியர்கள் திரும்பத்திரும்ப செல்கின்றனர். எனவே, பொதுத்தேர்வு ஆசிரியர் நியமன முறையை, மாற்ற வேண்டும் என்று, ஆசிரியர்கள் மற்றும் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் நடப்பாண்டில், பொதுத்தேர்வு மையத்துக்கான, ஆசிரியர் நியமனத்தில், குலுக்கல் முறையை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற விருப்பமுள்ள, தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது ஏற்கப்பட்ட பின், பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்படும். அதன்பின் கலெக்டர், கல்வித்துறை இணை இயக்குனர், ஆசிரியர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில், தேர்வு மைய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், இதற்கான குலுக்கல் நடைபெறும். ஒவ்வொரு தேர்வுக்கும், குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு முன்பே, தேர்வு மையம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். முறைகேடு புகாருக்கு ஆளான தேர்வு மையங்களில், முழுமையாக வீடியோ செய்யப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement