Ad Code

Responsive Advertisement

ரூபெல்லா தடுப்பூசி போடுவது மார்ச் 14 வரை நீட்டிப்பு


ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி போடுவது, மார்ச், 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்த தடுப்பூசி போடலாம்.



இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, ரூபெல்லா - தட்டம்மை தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை, 70 லட்சம் குழந்தைகளுக்குத் தான் போடப்பட்டுள்ளது. வரும், 28க்குள், ஒரு கோடி குழந்தைகளுக்கு போடப்பட்டுவிடும்.

தமிழகத்தில், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே, தடுப்பூசி போடுவதற்கான அவகாசத்தை, மார்ச், 14 வரை நீட்டிக்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மார்ச், 1 முதல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகளிலும், இந்த தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement