Ad Code

Responsive Advertisement

PAYTM e - Wallets banking & payment charges details

உங்களது பேடிஎம் வேலட் :: பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் & பல்வேறு கட்டணங்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின்(ஆர்பிஐ) வழிகாட்டுதலின் படி ஒன்97 கம்யூனிகேஷன் தனது வேலட் பிஸினஸை தேவையான ஒப்புதல் பெற்ற பிறகு புதிதாக தொடங்கியுள்ள பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட்([பிபிபிஎல்)-க்கு மாற்றம் செய்யும்.


பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட்(பிபிபிஎல்)-இன் உரிமையானது 51 சதவிகிதம் விஜய் சேகர் சர்மாவிடமும் 49 சதவிகிதம் ஒன்97 கம்யூனிகேஷன் லிமிடெட்-உடனும் உள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் ஒரு இந்திய நிறுவனம். இதன் உரிமையாளரும் இதனை நடத்துபவர்களும் இந்தியர்களே.
ஜனவரி 31 2017 வரை பேடிஎம் வேலட்டில் இருந்து எந்தவொரு பேங்க் அக்கவுண்ட்டிற்கும் செய்யப்படும் எல்லா பண பரிமாற்றத்திற்கும் 0 சதவிகிதம் மட்டுமே பயனீட்டாளரிடம் இருந்து பெறப்படும். பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் அறிமுகம் செய்த பின் ஜனவரி 31 2017-க்கு பிறகும் உங்களுடைய பண பரிமாற்றதை பேடிஎம் வேலட்டில் இருந்து பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்டிற்கு 0 சதவிகிதத்தில் பரிமாற்றம் செய்துக்கொள்ளலாம்.




அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

என்னுடைய தற்போதைய பேடிஎம் வேலட்டிற்கு நடக்கபோவது என்ன?
உங்களது வேலட் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட்-க்கு அப்படியே பரிமாற்றம் செய்யப்படும். உதாரணத்திற்கு கேஒய்சி வேலட் கேஒய்சி வேலட்டாகவும் மற்றும் மினிமம் கேஒய்சி வேலட் மினிமம் வேலட்டாகவும் பரிமாற்றம் செய்யப்படும்.
பேடிஎம் வேலட்டில் உள்ள என்னுடைய பணம் என்ன ஆகும்?
உங்களுடைய பணம் பேடிஎம் வேலட்டில் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. இது எப்போதும் உங்களுடையது. நீங்கள் ஒருபோதும் இதை தவற விடமாட்டீர்கள். உங்களுடைய தற்போதைய பேடிஎம் வேலட்டில் ஏதேனும் மீதம் வைத்துள்ளீர்கள் என்றால் அது உங்களுடைய புதிய பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் வேலட்டில் காண்பிக்கப்படும்.
கடந்த ஆறுமாத காலமாக உங்களுடைய வேலட் செயல்பாட்டில் இல்லாமல் பேலன்ஸ் பூஜ்ஜியமாக இருந்தால் அது பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் வேலட்டிற்கு மாற்றம் செய்யப்படாது. நீங்கள் செயலியிலோ, இணையதளத்திலோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ லாகின் செய்யும் போது நீங்கள் கொடுக்கும் ஒப்புதலின் பெயரில் மாற்றம் நடைபெறும்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க்-இல் நான் ஒரு பேங்க் அக்கவுண்ட்டை பெறுவேன் என்பது இதன் அர்த்தமா?
இல்லை, புது நிறுவனம் என்று சொல்லப்படுகிற பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட்-க்கு உங்களின் வேலட் உரிமையை மாற்றம் செய்வது மட்டுமே இதன் பொருளாகும். வங்கி அறிமுகம் செய்தபின் எங்களுடன் தனி பேங்க் அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொள்ள உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கொடுக்கப்படும்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் வேலட்டில் இருந்து பிற வங்கிக்கு என்னால் என் பணத்தை அனுப்ப முடியுமா?
ஆம், உங்களுடைய பேடிஎம் பேமெண்ட் பேங்க் வேலட்டில் இருந்து எந்தவொரு வங்கி அக்கவுண்ட்டிற்கும் உங்களால் பணத்தை அனுப்ப முடியும்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் அறிமுகம் செய்த பின் வேலட்டை தொடர்ந்து பயன்படுத்த அக்கவுண்ட் திறப்பது கட்டாயமா?
பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க்-இல் இருந்து வேலட்டை பயன்படுத்த நீங்கள் அக்கவுண்ட் எதுவும் திறக்க தேவையில்லை
இதில் இருந்து நான் வெளியேற முடியுமா?
ஒருவேலை உங்களின் பேடிஎம் வேலட் சலுகைகளை தொடர்ந்து பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை என்றால் தயவு செய்து care@paytm.com என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பவும் அல்லது Paytm.com/care என்ற இணையதளத்தை லாகின் செய்து வெளியேறுவதற்கான உங்களின் விருப்பத்தை எங்களுக்கு தெரியப்படுத்தி மீதமுள்ள உங்களின் பணத்தை ஒரே முறையில் உங்களின் பேங்க் அக்கவுண்ட்டிற்கு மாற்றம் செய்து கொள்ளவும். நீங்கள் மாற்றம் செய்ய விரும்பும் உங்கள் வங்கிக் கணக்கின் பெயர், வங்கிக் கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி கோடை குறிப்பிடவும்.
இந்த பரிமாற்றத்திற்க்காக நான் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?
இந்த பரிமாற்றத்திற்காக நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை
நன்றி

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement