Ad Code

Responsive Advertisement

Jallikattu 🐂 :அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டு வரப்படும் அவசரச் சட்டத்துக்கு அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்திருப்பதாக மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.


ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டுவரப்படும் அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்த அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்தும் தமிழகம் முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்தனர்.

மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இது குறித்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம். எனவே, மத்திய உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்தினோம்.

அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க உள்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement