Ad Code

Responsive Advertisement

'ஆன்லைனில்' பணம் செலுத்தினால் 'காஸ்' சிலிண்டர் விலை குறையும்

'சமையல், 'காஸ்' சிலிண்டருக்கான கட்டணத்தை, 'ஆன்லைன்' மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டருக்கு, ஐந்து ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


< தள்ளுபடி:

மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், 'பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்கள், மின்னணு முறையில் அதற்கான பணம் செலுத்தினால், 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. 


சிறப்பு சலுகை:

இந்நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளன. 


ரூ.5 குறைப்பு:

இதன்படி, காஸ் சிலிண்டரை ஆன்லைனில் புக் செய்யும் வாடிக்கையாளர்கள், ஆன்லைன் வாயிலாகவே அதற்கான தொகையை செலுத்தினால் சிலிண்டருக்கான விலையில், ஐந்து ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும் என, அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன; இது, பணமற்ற பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் என, எண்ணெய் நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement