Ad Code

Responsive Advertisement

15 வயது பூர்த்தியானவர்களுக்கு மறு ஆதார் பதிவு கட்டாயம்

'ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களது கைரேகை, கருவிழி பதிவு போன்ற, 'பயோமெட்ரிக்' தகவல்களை, ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு, நேரில் சென்று அளிக்க வேண்டும்' என, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர், குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: 

தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, ஆதார் எண் வழங்க, தமிழகம் முழுவதும், 545 நிரந்தர சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிர்வகித்து வருகின்றன.இம்மையங்களில், அக்., 1 முதல், டிச., 31 வரை, 9.91 லட்சம் பேருக்கு, ஆதார் எண்ணிற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

மத்திய அரசு வெளியிட்ட, ஆதார் சேர்க்கை விதிமுறைகளின்படி, ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களது பயோமெட்ரிக் தகவல்களை, 15 வயது பூர்த்தியடைந்த நாளில் இருந்து, இரு ஆண்டுகளுக்குள், மீண்டும் கட்டாயமாக அளிக்க வேண்டும். எனவே, இன்று முதல், நிரந்தர சேர்க்கை மையங்களில், 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களுடைய பயோமெட்ரிக் தகவல்களை அளிக்கலாம்; இதற்கு, கட்டணம் எதுவும் கிடையாது.இவ்வாறு குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement