Ad Code

Responsive Advertisement

NEET தமிழ் உள்பட 8 மொழிகளில் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு தமிழ் உள்பட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

8 மொழிகளில் நுழைவுத்தேர்வு வருகிற 2017-2018-ம் கல்வி ஆண்டு முதல் அகில இந்திய அளவில் மருத்துவ இளநிலை பட்டப் படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்.) நுழைவுத்தேர்வை இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் நடத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநிலங்களில் உள்ள ஒதுக்கீட்டின் கீழ் சேர தகுதி பெறுவார்கள். நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்துவது குறித்து மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா டெல்லியில் கடந்த மே மாதம் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சம வாய்ப்பு மாநில கல்வி வாரிய பாட திட்டத்தில் படித்து தேர்வான மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ கல்வியில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளை தவிர்க்கும் வகையிலும் மாநில மொழிகளில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement