Ad Code

Responsive Advertisement

மாநகராட்சி பள்ளிகளுக்கு கலந்தாய்வு எப்போது: அறிவிப்பை எதிர்பார்த்து ஆசிரியர்கள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு முடிந்த நிலையில், மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் விரைவில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு உட்பட்ட அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு முடிந்தது. மேலும் சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வும் நேற்றுடன் முடிந்தது.

ஆனால் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு கூட இதுவரை வெளியாகவில்லை. இதனால் 65 பள்ளிகளை சேர்ந்த 900 ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல், 5 ஆண்டுகளாக பள்ளிகள் தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பெருமளவில் குறைந்துள்ளது. எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி, தனியாருக்கு மாநகராட்சி பள்ளிகள் தாரைவார்க்கப்படுகின்றன.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளுக்கு கலந்தாய்வு நடக்கும்போதே, மாநகராட்சி பள்ளிகளுக்கும் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். நடப்பதில்லை. இந்தாண்டும் இதுவரை அறிவிப்பு இல்லை. 

மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளன. அங்கு மற்றொரு தலைமையாசிரியர் கூடுதல் பொறுப்பு வகிப்பதால், இரண்டு பள்ளிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. விரைவில் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டால், ஓரளவு தீர்வு கிடைக்கும்.
மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement