Ad Code

Responsive Advertisement

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

வருமான சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், சிறுபான்மைப் பிரிவு பள்ளி மாணவர்கள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட், 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.


இந்த உதவித்தொகையை, மத்திய அரசு உதவியுடன், தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்காக, விண்ணப்பிக்கும் மாணவர், தன் குடும்ப வருமான சான்றிதழை, கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால், இந்தச் சான்றிதழ் பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.அனைத்து சான்றிதழ்களும், தாசில்தார் அலுவலகம் மற்றும் பொது இ - சேவை மையங்களில், 'ஆன் - லைனில்' வழங்கப்படுவதால், தினமும் குறைந்த அளவு மாணவர்களுக்கே கிடைக்கிறது.

இதனால், மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.எனவே, உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 1 - 8 வகுப்பு வரையிலான மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும், ஜூலை, 15ம் தேதி வரை வழங்கப்பட்ட அவகாசம், ஆகஸ்ட், 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கல்வி நிலையங்களின் சார்பில், மாணவர்கள் விவரம் சமர்ப்பிக்க ஆகஸ்ட், 31ம் தேதி வரை, கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.ஒன்பது மற்றும், 10ம் வகுப்பினர், கல்வி நிலையங்கள் வழியே, 'ஆன் - லைன்' மூலம் அனுப்ப, ஆகஸ்ட், 31ம் தேதி வரையிலும் அவகாசம் உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement