Ad Code

Responsive Advertisement

போட்டித் தேர்வு அறிவிப்பு: ஓவிய ஆசிரியர்கள் குழப்பம்.

தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், விளையாட்டு, இசை ஆகியவற்றில் பகுதி நேர ஆசிரியர்கள் 6,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஓவிய ஆசிரியர்களாக உள்ளனர். இவர்கள் முழுநேர ஆசிரியராக நியமனம் பெற, கடந்த ஜனவரியில் போட்டி தேர்வு அறிவிப்பை டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வு ஜூன் 6ல் நடக்க உள்ளது. அறிவிப்பில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்தவிதமான கல்வித்தகுதி தேவை என அறிவிக்கவில்லை. ஓவிய ஆசிரியர் நல்லகாசிராஜன் கூறியதாவது: இத்தேர்வு ஓவிய அறிவும், ஓவிய கல்வித்திறனையும் அடிப்படையாக கொண்டிருப்பதால், எந்தவித நிபந்தனையும் இன்றி, அனைவரையும் பங்கேற்க வாய்ப்பு தர வேண்டும். வரைதல், வண்ணம் தீட்டுதல் குறித்தும் எந்தவிபரமும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து டி.ஆர்.பி.,க்கும் தெரியப்படுத்தியுள்ளோம், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement