Ad Code

Responsive Advertisement

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்

சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பதிவு செய்யப்படும் கருத்து சுதந்திரமான மெசேஜ்களை சமூக ஊடங்கங்களில் வெளியிடுவதை குற்றமாக கருத முடியாது என்று தெரிவித்தது.

மேலும், சமூக வலைதளங்களில் எரிச்சலூட்டும், சிரமமான  மற்றும் அபாயகரமான செய்திகளை பதிவு செய்யும் நபர்களை காவல்துறையினர் கைது செய்ய சட்டத்தில் அதிகாரம் உள்ளது. இதுகுறித்த கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை. ஒருவர் தனது பேச்சு சுதந்திரத்தை  நடைமுறைப்படுத்தவது அல்லது அமுலாக்குவது குற்றமல்ல. சைபர் குற்றங்களுக்கு ஏற்றவாறு இந்த சட்டம் மாற்றி செயல்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பான கருத்து சுதந்திரம் மற்றும் சட்டத்தை மீறுதல் தொடர்பாக கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement