Ad Code

Responsive Advertisement

பிளஸ்2,10ம் வகுப்புகளில் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆகியோருக்கான சிறப்பு முகாம் வருகிற 25-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது.


இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடத்தை தக்க வேண்டும். இதற்காக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், வகுப்பறையில் மாணவ, மாணவிகளின் கற்கும் அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்க ஆசிரியர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் நடந்த  பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் 2500 பேர்கள் ஒரு பாடம் முதல் 5 பாடங்கள் வரையிலும் தோல்வி அடைந்துள்ளனர். எனவே இதுபோன்ற மெல்ல கற்றல் மற்றும் அரையாண்டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு முகாம் ஆமத்தூர் எ.எ.எ பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட இருக்கிறது.

இது தொடர்பான தகவல்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலம் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட இருக்கிறது. இதில், மாணவ, மாணவிகளின் கல்வி திறன் குறித்த தகவல்களை  பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் கல்வியின் எதிர்காலம் அதில் பெற்றோர்களின் பங்கு பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட இருக்கிறது. பொதுத்தேர்வுகள் தொடங்குவதற்கு 40 நாள்களே உள்ள நிலையில் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் விடுப்பு இல்லாமல் வருகை தருதல் கட்டாயமாகிறது. அதேபோல், ஆசிரியர் குறிப்பிட்ட பாடங்களையும், வினாத்தாள் புத்தகத்தையும் விடாமல் தொடர்ந்து படித்து பயிற்சி பெறவும் முகாமில் வலியுறுத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement