Ad Code

Responsive Advertisement

நாளை பணியில் சேரப்போகும் ஆசிரியர்களே ....

நாளை  பணியில் சேரப்போகும் ஆசிரியர்கள் முடிந்த அளவு காலையே நேரத்திற்கு சென்று முதலில் பணியில் கையொப்பம் இடுங்கள்... ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆசிரியர்கள் ஒரு பள்ளியில்  பணியில் சேரும்போது இது மிகவும் முக்கியம்.... " DEPUTATION  " , "DEPLOYMENT " வரும்போது இது உங்களுக்கு மிகவும் பயன்படும்.... மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு பணியில் சேரப்போகும் நீங்கள் போராட்ட குணத்தை நம் அரசு பள்ளி மாணவர்கள் முன்னேற்றத்தில் தொடருங்கள்... அரசுக்கும், நம்மை நம்பி வரும் மாணவர்களுக்கும், நேர்மையாக இருப்போம்.... பள்ளியில் இருக்கும் சீனியர் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளியுங்கள்...  அனைவருக்கும் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்..... அநேகமாக   நாளை ஒருநாள் மட்டுமே வேலைநாளாக இருக்கும்... பின்பு காலாண்டு விடுமுறை இருக்கும்.... இந்த பத்து விடுமுறை நாட்களில் வெளிமாவட்டத்தில் பணிசெய்வோர் புது இடத்திற்கான தேவைகளை தயார் செய்துக்கொள்ளுங்கள்.... இணையத்தில் பரவி இருக்கும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளை உதவிக்கு இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்... பட்ட துன்பங்கள் அனைத்தும் இன்றுடன் உங்களக்கு முடிவி பெறுகிறது.... நாளை முதல் நீங்கள்  அரசின் அங்கம்... உங்கள் பின்னால் ஒரு அரசு இருக்கிறது.... உங்கள் முன்னால் "மாணவர்கள்"... அவர்களின் வாழ்க்கை  உங்களிடம்....  வாழ்த்துக்கள் .... 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement