Ad Code

Responsive Advertisement

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம்: கோவை மாவட்ட கல்வி அதிகாரி 'சஸ்பெண்ட்'

கோவை: அரசு பள்ளிகளில், முறைகேடாக,ஆசிரியர் நியமனத்துக்கு துணை போனதாக,கோவை மாவட்ட கல்வி அதிகாரி, தற்காலிக
பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில், ஏழு ஆசிரியர்கள், 2010க்குமுன், பணியில் சேர்ந்ததாக, பதிவேடுதயாரித்து, பணிநியமனம் முறைகேடாகநடந்தது. இதில், கல்வி அதிகாரிகளுக்கு,தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.இதையடுத்து, கோவை மாவட்ட கல்விஅதிகாரிகள் குழு, விசாரணை நடத்தி,அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதில்,ஆசிரியர் பணி நியமனத்தில், முறைகேடுநடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைஅடுத்து, வால்பாறை உதவி கல்வி அதிகாரிகாளிமுத்து, தற்காலிக பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளார். விதிமீறி, பணியில்சேர்ந்த ஆசிரியர் கள் ஏழு பேரிடமும்விளக்கம் கேட்டு, கல்வித்துறை, 'நோட்டீஸ்'அனுப்பி உள்ளது. கோவை மாவட்டதொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு)காந்திமதி கூறுகையில், ''முதல்கட்டவிசாரணையில், புகார் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்டஏ.இ.ஓ., தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுஉள்ளார். இரண்டாம் கட்ட விசாரணைமுடிவுகள் கிடைத்தபின், சம்பந்தப்பட்டஆசிரியர்கள் மீது, துறை ரீதியானநடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement