Ad Code

Responsive Advertisement

கோடை வகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் பாரதிராஜன், அமைப்பு செயலாளர் சண்முகநாதன், மாவட்ட துணைத்தலைவர் பூமிநாதன், தலைமையிட செலயாளர் ராமச்சந்திரன், கல்வி மாவட்ட தலைவர்கள் செல்வராஜ், ஜெயசங்கர் பங்கேற்றனர்.

2014 மார்ச்சில் பிளஸ் 1 முழு ஆண்டுதேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்,மாணவர்களை வரவழைத்து பிளஸ் 2 பாடங்களை நடத்துவதை தடை செய்ய வேண்டும். கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுதல், கோடை வகுப்புகளை ரத்து செய்யக்கோரி முதன்மை கல்வி அலுவலகம் முன் மே 1ல் உண்ணாவிரதம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement