நீங்கள் தொழில் முனைவோரா அல்லது சிறு தொழிலாளியா எதாவது சாதிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களா? அப்போது இந்த செய்தி உங்களுக்கு பலன் தரும்.
தற்போதைய கொரோனா காலாத்தில் பெரும்பாலானோர் வேலையின்றி தவித்து வருகின்றர். அவர்களுக்கு உதவும் நோக்கில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ், விவசாயம் சாராத சிறு தொழிலாலர்களுக்கு SBI வங்கி 10,000 முதல் 10,00,000 வரை எளிய முறையில் கடனை பெற்றிட முடியும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வீட்டில் இருந்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
இந்த திட்டத்தில் கீழ், தொழிலாளர்கள் கடன் பெற வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் வீட்டில் இருந்தே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.
59 நிமிடத்தில் கடன் பெறலாம்
இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், வங்கி இணையத்திளத்தில் கேட்கப்படும் ஆவணங்களை நீங்கள் சரியாக பூர்த்திசெய்யும் பட்சத்தில் உங்களுக்கான கடன் வெறும் 59 நிமிடங்களில் அனுமதிக்கப்படும். இதனால் அலைச்சல் குறைக்கப்படுகறது.
வட்டி விகிதம்
முத்ரா திட்டத்தின் கீழ் கிடைக்கும் கடன்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த திட்டத்தின் கீழ் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 8.5% ஆக தொடங்குகிறது.
பிரதமரின் முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Loan)
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் விவசாயம் அல்லாத சிறு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை முத்ரா திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த முத்ரா கடன் திட்டம் 3 வகைகளில் வழங்கப்படுகிறது.
சிசு (SHISHU) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 வரை ஒருவர் கடன் பெறலாம்.
கிஷோர் (KISHOR) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக Rs.50,000 முதல் ஐந்து லட்சம் வரை கடன் பெற முடியும்.
தருண் (TARUN) முத்ரா வங்கி திட்டம், இத்திட்டம் மூலமாக ஒருவர் ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரையில் கடன் வசதி பெற முடியும்.
யாரெல்லாம் இந்த திட்டத்தில் கடன் பெறலாம்?
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் எந்தவொரு இந்திய குடிமகனும் PMMY திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். உங்கள் தற்போதைய வணிகத்தை விரிவுபடுத்த விரும்பினாலும், அதற்கு பணம் தேவைப்பட்டாலும் , நீங்கள் பிரதான் மந்திரி முத்ரா திட்டத்தின் கடன் பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
வ்வளவு கடன் கிடைக்கும்?
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. சிஷு (Shishu) என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் (Kishor) என்ற பெயரில் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் (Tarun) என்ற பெயரில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
யாருக்கெல்லாம் கடன் கிடைக்காது?
விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிலுக்கு இத்திட்டத்தில் கடன் கிடைக்காது. இந்தக் கடனுக்காக எந்தவொரு கார்பரேட் நிறுவனமும் விண்ணப்பிக்க முடியாது. புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனளிக்கும்.
விண்ணப்பிப்பது எப்படி?
உங்களுக்கு அருகில் உள்ள வங்கிகளிலேயே இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பத்தில் அடையாளச் சான்று, இருப்பிட சான்று, புகைப்படம், இயந்திரம் மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்கான ரசீது, சப்ளையர் விபரங்கள், தொழிற்சாலை இருக்கும் இடம் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். முத்ரா கடன் கிடைத்தவுடன் பயனாளிக்கு அதற்கான முத்ரா அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை மூலப் பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டு போல நீங்கள் பயன்படுத்தலாம். இந்த அட்டை மூலமாக கடன் தொகையில் 10 சதவீதம், அதிகபட்சம் ரூ.10,000 வரை பயன்படுத்தலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை