ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு திறவுகோலாகும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தைப் பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும்.
உங்கள் இதயம் அதன் பணியை திறமையாகச் செய்யும்போது, உங்கள் உடல் இரத்தத்தில் பரவும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது, இது உங்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிக்க போதுமான ஆற்றலைத் தருகிறது. நாள்பட்ட சோர்வு இதய பிரச்சினைகளுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
இதயத்துடிப்பில் மாறுபாடு
இதயத்துடிப்பு, நாம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் பொறுத்து மாறுபட்டு அமையும். வெப்பமான சூழ்நிலை மற்றும் அதிக மாசுபட்ட சூழல் ஆகியவை இதயத் துடிப்பு மிக வேகமாக அதிகரிக்க காரணமானவையாகும். செயற்கையாக குளிரூட்டப்பட்ட இடங்களிலும், கிருமிகள் தாக்காத இடங்களிலும் வாழ்வது இதயத்தின் அதிகபட்ச வேகத்தையும், வேலையையும் குறைக்கும்.
நீரிழிவு பரிசோதனைகள்
நீரிழிவு நோயுள்ளவர்களின் உடலில் உள்ள அதிக பட்ச இன்சுலின் எதிர்ப்பு சக்தியின் காரணமாக அவர்கள் மாரடைப்பால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அத்தகையவர்கள அவ்வப்போது உடலின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வது, மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க எடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும். முறையான உணவுக் கட்டுப்பாடும், மருந்துகளும், நீரிழிவு நோயை குணப்படுத்துவதுடன், இதயம் சம்பந்தமான சிக்கல்கள் வராமலும் தடுத்து விடும்.
பல்வகை வைட்டமின்
உணவுகள் வேலைப்பளு மிக்க வாழ்க்கையால் முறையான சரிவிகித உணவுகளை வசதியிருந்தும் சாப்பிட முடிவதில்லை. எனவே முறையான உணவுக் கட்டுப்பாடுகளை பராமரிப்பது, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்யும். மேலும் மருத்துவரிடம் தேவையான தினசரி வைட்டமின் வகைகளை கேட்டறிந்து கொள்ளவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், இதயக் குழாய்களை வலிமைப்படுத்தி, மொத்தமாகவே உடல் நலனைக் காத்திடும்.
மன அழுத்த மேலாண்மை
இன்றைய காலகட்டத்தில் இதயத்திற்கு அபாயம் ஏற்படுத்தும் முதன்மையான செயலாக மன அழுத்தம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படும் வேளைகளில் ஹார்மோன்களின் வருகை அதிகரிக்கப்பட்டு, அவற்றை ஈடுகட்டும் விதமாக இதயத்தின் குழாய்கள், அவற்றின் வலிமைக்கும் மேலாக வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதன் விளைவாக இதயம் பலவீனப்படுவது மட்டுமல்லாமல், மாரடைப்பும் வரும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே மன அழுத்தம் இல்லாமல், வேலைகளை செய்து வருவது இதயத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையாக கொள்ளலாம்.
புகை நமக்குப் பகை
என்னதான் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும் புகை பிடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் கூடி வருகிறது. புகை பிடிப்பவர்கள், புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட 25% அதிகமாக மாரடைப்பிற்குள்ளாகும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. எனவே, பகையான புகையை விட்டொழியுங்கள், ஆரோக்கியமான வாழ்வினை வாழத் தொடங்குங்கள்.
மனச்சோர்வு
மனச்சோர்வு என்று அழைக்கப்படும் இந்த பிரச்னை நேரடியாக மாரடைப்பிற்கு கதவை திறந்து விடும் வேளையை அமைதியாக செய்யும். மனச்சோர்வு உடையவர்களின், உடலில் ஆக்ஸிடோசின் மற்றும் செரோடோனின் ஆகியவற்றின் உற்பத்தி குறையத் தொடங்கி, காலப்போக்கில் இரத்த ஓட்டம் தடைபடக் காரணமாகிவிடும். முறையான கவுன்சிலிங் மற்றும் உளவியல் ஆலோசனைகள் மூலம் மட்டுமே இந்த மனச்சோர்வினை தடுக்க முடியும்.
கொழுப்பின் அளவை தொடர்ச்சியாக பரிசோதித்தல்
ஒவ்வொரு வருடமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவை தவறாமல் பரிசோதித்து அறிவது, இதயம் பலவீனமடைவதை தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும். இவ்வாறு கொழுப்பின் அளவினை அறிவதன் மூலம் உடலுக்கு கொடுக்க வேண்டிய சரியான அளவிலான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கியத்தைப் பெறலாம். மேற்கண்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும் போது, பலமான இதயத்தை கொண்டவராகவும் மற்றும் இதய நோய்களிலிருந்து விடுதலை பெற்றவராகவும் இருக்க முடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை