Ad Code

Responsive Advertisement

மாத ஊதியம் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு – PF தொகையை எடுப்பதற்கான காரணங்கள்!

 





மாத ஊதியம் பெறும் EPF வசதி கொண்ட ஊழியர்கள் எந்தெந்த காரணங்களுக்காக EPF தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.


EPF தொகை:

மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை மாதம் தோறும் அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இது குறிப்பிட்ட ஆண்டில் ஒரு பெரும் தொகையாக சேர்ந்து உதவியாக இருக்கும். இந்நிலையில் EPF கணக்கு வைத்திருப்பவர் ஒரு மாதம் சம்பளமின்மைக்கு பின்னர் EPF நிலுவை தொகையை 75 சதவிகிம் வரை பெற முடியும், மேலும் வேலையின்மை தொடர்ந்தால் மீதமுள்ள 25 சதவிகித தொகையை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. எந்த காரணங்களுக்காக இந்த தொகை பெறலாம் என்ற விவரம் பின்வருமாறு,


மருத்துவ தேவை:

சம்பளம் பெறும் ஊழியரின் மருத்துவ செலவு அல்லது ஊழியரின் கணவன் அல்லது மனைவிக்கான செலவு, அல்லது குழந்தைகளுக்கான மருத்துவ செலவுகளுக்கும் பணம் பெற முடியும். மேலும் கொரோனா காலம் போன்ற பேரிடர் காலத்தில் ஊழியர்கள் இழப்பு ஏற்படும் பட்சத்தில் 50% தொகை பெற்றுக் கொள்ளலாம். 


திருமணம்:

ஊழியர்கள் தங்களது திருமணத்திற்காக அல்லது தனது குழந்தைகளின் திருமணத்திற்கு இதன் மூலமாக 50 சதவிகித தொகை கடனாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக ஊழியர்கள் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருக்க வேண்டும்.


கல்வி:

ஊழியர்கள் கல்வி தொடர்பான செலவுகளுக்காக அவரின் வைப்பு நிதி தொகையில் 50% வரை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் அவர் குறைந்தபட்சம் 7 வருடம் பணியில் இருக்க வேண்டும். இது ஊழியரின் குழந்தைகள் 10 ஆம் வகுப்பிற்கு மேல் சென்றால் மட்டுமே எடுக்க வேண்டும். 


வீட்டுக்கடன்:

ஊழியர்கள் புதிதாக ஒரு வீடு அல்லது வீட்டினை புதுப்பிக்க வருங்கால வைப்பு நிதி மூலமாக கடன் பெற முடியும். ஆனால் அந்த வீடானது அவர் மற்றும் அவரது மனைவி பெயரில் இருக்க வேண்டும். மேலும் இந்த கடன் தொகை 5 வருட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் 12 மாதங்களுக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட வேண்டும். வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஆறு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும். புதுப்பித்தல் பணியும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும்.


வீடு புதுப்பிக்க:

வீட்டை புதுப்பிக்க கடன் பெற, அந்த வீடு ஊழியர் அல்லது அவரது மனைவி பெயரில் இருக்க வேண்டும். கடன் தொகையானது ஒரு நபரின் அடிப்படை சம்பளத்தின் 12 மடங்கு வரை கடன் கிடைக்கும். இந்த கடன் பெற 5 ஆண்டுகள் வரை பணியில் இருக்க வேண்டும். மேலும் வீடு கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement