Ad Code

Responsive Advertisement

Second Hand -ல் வாங்க சிறந்த மாருதி கார்கள்!! காரை வாங்குவதற்கு முன் இவற்றை பற்றி தெரிஞ்சிக்கோங்க!

 


இந்தியாவில் பலர் விரும்பக்கூடிய கார் பிராண்டாக, முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. இதனால் இந்த இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனத்தை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.


இருப்பினும் செகண்ட் ஹேண்டில் எத்தைகைய மாருதி காரை வாங்குது என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம். அத்தகையவர்களுக்காகவே பெரிய அளவில் பராமரிப்பு செலவு இல்லாமல் வாங்கக்கூடிய மாருதி கார்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.


செகண்ட் ஹேண்டில் வாங்க சிறந்த மாருதி கார்கள்!! காரை வாங்குவதற்கு முன் இவற்றை பற்றி தெரிஞ்சிக்கோங்க!


மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா





மாருதி சுஸுகியின் மிக சிறந்த தயாரிப்பு வாகனங்களுக்கு கிராண்ட் விட்டாரா மிக சிறந்த எடுத்துக்காட்டு. தற்போது வரையில் இந்தியாவின் சிறந்த எஸ்யூவி கார் என்றால், அதில் விட்டாரா மாடலை தவிர்க்க முடியாது.


இதனால் எஸ்யூவி கார்களை விரும்பக்கூடியவர்கள் தாரளமாக விட்டாரா காரை தேர்வு செய்யலாம். தரமான மாருதி கார் தான் என்றாலும், செகண்ட் ஹேண்டில் வாங்கும்போது பராமரிப்பு செலவை சற்று அதிகமாக இழுத்துவிட கூடியது.


மாருதி ஏ-ஸ்டார்





தற்சமயம் எஸ்யூவி கார்களை தயாரிப்பதில் ஹூண்டாய் நிறுவனம் முன்னிலையில் உள்ளது என்றால், இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்களை தயாரிப்பதில் எப்போதும் மாருதி சுஸுகி தான் டாப். இந்த வகையில் சில வருடங்களுக்கு மாருதி தயாரித்து விற்பனை செய்து கொண்டிருந்த ஹேட்ச்பேக் கார், ஏ-ஸ்டார்.


இருப்பினும் ஆல்டோவிற்கு இணையாக ஏ-ஸ்டார் கார்கள் விற்பனையாகவில்லை. இதனால் இப்போது சிறந்த தொகையில் மாருதி ஏ-ஸ்டார் கார்கள் செகண்ட் ஹேண்டில் விற்பனைக்கு கிடைக்கலாம்.


மாருதி சுஸுகி ரிட்ஸ்





ஏ-ஸ்டாரை தொடர்ந்து நாம் பார்க்கவுள்ள மற்றொரு சிறந்த மாருதி பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் தான் ரிட்ஸ். ஆல்டோ பரம்பரையில் இருந்து வெளிவந்த இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டது.


தற்சமயம் விற்பனையில் இல்லாவிடினும் இதற்கான பாகங்கள் சந்தைகளில் தாராளமாகவே கிடைக்கின்றன. எனவே ஹேட்ச்பேக் கார் பிரியர்கள் எந்தவொரு தயக்கமுமின்றி ரிட்ஸின் பக்கம் செல்லலாம்.


மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ்





தற்போதும் பலேனோ கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால் பலேனோ ஆர்எஸ் மாடலின் விற்பனை எப்போதோ நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் உண்மையான த்ரில்லை அனுபவிக்க விரும்பினால் பலேனோ ஆர்எஸ் காரை செகண்ட் ஹேண்ட் சந்தையில் வாங்கலாம்.


மாருதி சுஸுகி ஜென் எஸ்டிலோ


காரை இப்போதுதான் முதல்முறையாக வாங்குகிறீர்கள் என்றால் எஸ்டிலோ மிக சிறந்த தேர்வாகும். ஏனெனில் பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் மாருதி சுஸுகி எஸ்டிலோ 1 லட்சத்திற்குள்ளேயே கிடைக்கிறது.





இதனால் 1.5 லட்சத்தை கையில் வைத்து இருந்தால் இந்த மாருதி காரை தாராளமாக வாங்கலாம். எங்களது மாருதி சுஸுகியின் முந்தைய கால சிறந்த கார்கள் லிஸ்ட்டில் எப்போதும் எஸ்டிலோவிற்கும் இடம் உள்ளது.


மாருதி ஜிப்ஸி



அன்றாட பயன்பாட்டிற்காக இல்லாமல், ஆஃப்-ரோட்டிற்காக செகண்ட் ஹேண்டில் மாருதி காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், ஜிப்ஸியின் பெயரை கூறாமல் எப்படி இருக்க முடியும். ஆனால் செகண்ட் ஹேண்டில் ஜிப்ஸியை வாங்க வேண்டுமென்றால், நிச்சயம் நீங்கள் முழு சீரமைப்பிற்கு தயாராக இருக்க வேண்டும்.



மாருதி சுஸுகி எஸ்.எக்ஸ்4


மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் லெஜண்ட்ரி செடான் கார், எஸ்.எக்ஸ்4. உட்புறத்தில் விசாலமான இடவசதி மற்றும் மலிவான பராமரிப்பு செலவை வேண்டுவோர்க்கு இந்த செடான் கார் சிறந்த தேர்வாக இருக்கும்.




மாருதி கார்களுக்கு பெரிய அளவில் பராமரிப்பு செலவு ஆகாது என்பது உங்களுக்கே தெரியும். தற்போதைய பெட்ரோல் விலை உயர்வுகளை கருத்தில் கொண்டு மாருதி சுஸுகி எஸ்.எக்ஸ்4 காரில் சிஎன்ஜி தொகுப்பை கூட பொருத்தி கொள்ளலாம்.


Post a Comment

1 Comments

  1. Great Article Sir Jee !
    I also apply for UP Shadi anudan and got my 51 Thousand INR in my account. I also Check UP Vivah Anudan Status Check on official website of Shadi Anudan Uttar Pradesh Official Website

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement